யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Reutlingen வசிப்பிடமாகவும் கொண்ட தியாகேஸ்வரி குமாரவேல் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மண்ணில் பிறந்து
தாய் மடியில் வளர்ந்து
தீயில் எரிந்து
காற்றில் கலந்து
சுவிற்சலாந்து
றயின்(Rhein)நதியாற்றில்
ஜலசங்கமமாகிவிட்ட
எமது தாயாரின்
பிரிவறிந்து அனுதாபங்களும்
அஞ்சலிகளும் தெரிவித்த
அனைத்து உறவுகளுக்கும்
எமது நெஞ்சார்ந்த நன்றிகள்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அம்மாவின் அந்தியேட்டி கிரியைகள் வரும் 20-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் காலச் சூழ்நிலை காரணமாக உறவுகளை அழைக்க முடியாமையிட்டு வருத்தம் தெரிவிக்கிறோம்.