1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
21
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Reutlingen வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தியாகேஸ்வரி குமாரவேல் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை..
காதவழி தூரமெல்லாம்
கால் கடுக்க நடந்தாலும்
தேடாத இடமெல்லாம்
தேடி நாம் திரிந்தாலும் காணவில்லை
உங்களை போல துணை தனை!
அன்போடு பாசத்தையும் எமக்களித்து
நான் தான் என்று பண்புடனே நிமிர்ந்து நின்று
எம்மை நேசத்துடன் கட்டியணைத்து
நல்வழி காட்டிய எங்கள் அம்மாவே
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்