Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 JUL 1974
இறப்பு 05 NOV 2025
அமரர் தியாகராசா பிரேமகாந்தன்
ஆசிரியர்- கிளி/முரசுமோட்டை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை
வயது 51
அமரர் தியாகராசா பிரேமகாந்தன் 1974 - 2025 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.674, 7ம் யூனிற் இராமநாதபுரத்தை வதிவிடமாகவும், பளை மாசாரை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தியாகராசா பிரேமகாந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனது கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை

ஆண்டொன்று ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!

எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது அப்பா!

ஓராண்டு என்ன எத்தனை ஆண்டுகள் ஓடிமறைந்தாலும்
உங்கள் அன்பும் பாசமும் அரவணைப்பும்
என்றும் எம் நினைவை விட்டு அகலாது

உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்..!!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 06 Nov, 2025