யாழ். அல்வாய் திக்கத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா சந்திரரட்ணம் அவர்களின் நன்றி நவிலல்.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
எமது குடும்பத்தின் பாசத்தலைவனாய்
திகழ்ந்த எங்கள் அன்புத் தெய்வமே
எங்களின் வழிகாட்டியாய் வாழ்ந்து
அன்பையும் அரவணைப்பையும் தந்து
எங்களைத் தவிக்கவிட்டு அமைதியாய்
விண்ணுலகு சென்றீர்களே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட தியாகராஜா சந்திரரட்ணம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.