யாழ். அல்வாய் திக்கத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா சந்திரரட்ணம் அவர்கள் 22-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திருச்செல்வம் பகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரூபி அவர்களின் பாசமிகு கணவரும்,
சித்ரா(இத்தாலி) அவர்களின் அன்புச் சகோதரரும்,
சபிராமி, விநோஜன், சியான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரூபன்(சுவிஸ்), யசி(சுவிஸ்), சிங்கப்பூர்(சுவிஸ்), குயிந்தன்(கட்டார்) முகுந்தன்(இத்தாலி), காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இத்தாலி Palermo வில் 24-12-2020 அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.