யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த திவ்யா சுதாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈரவிழியோடு ஓராண்டு சென்றாலும்
மாறாது எம்துயர்
துடுப்புக்கள் இல்லாத தோணிகள்போல்
தவிக்கின்றோம் உம்பிரிவால்
எம்வாழ்க்கைத் தேரின் அச்சாணியே.!
விதியின் விளையாட்டோ..? சதியின் சூழ்ச்சியோ..?
நீங்கள் எம்மைவிட்டு பிரிந்துவிட்டீர்
நடுக்காட்டில் தவிக்கவிட்ட பேதைகள்போல்
தவிக்கின்றோம் உம்பிரிவால்..
நிஜமாய்கண்ட உம்மை
நிழற்படமாய் பார்க்கும்போது
நெஞ்சம் விம்முகிறது..
உம்மிடத்தை நிரப்பிடவே
அண்டம் எல்லாம் தேடிவிட்டோம்
உமக்கிணையாய் யாருமில்லை..
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
துளிகூட அழியாது உம்நினைவு..
அளவற்ற உம் அன்பிற்காய்
அலைகிறது எங்கள் மனம்..
மறுபடியும் உங்கள் வருகைக்காய்
காத்திருப்போம் இவ்வுலகில்..
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
உங்கள் குடும்பத்தினர்
Dear Thiviya, May your soul Rest In Peace. You will be remembered and admired for your kindness and courageous personality. Our prayers are with your family.