திதி : 31/07/2024
யாழ். கரவெட்டி துன்னாலை மத்தி கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், துன்னாலை, திருகோணமலை, கோண்டாவில், ஐக்கிய அமெரிக்கா New Jersey, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருப்பதிஅம்மா நடராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை நான்கு கடந்ததை
அன்பின் சிகரமாய் அரவணைப்பின்
அர்த்தமாய் வாழ்ந்த எம் அன்னையே!
வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை
நீ இல்லா வெற்றிடத்தை
ஆண்டு நான்கு கடந்தாலும் அம்மா
உன் இன்முகமும் புன்சிரிப்பும்
எம் மனதை விட்டகலவில்லை அம்மா!
ஒழுக்கத்தால் தீபமேற்றி சூடமாக எரிந்து எமக்கு
ஒளி தந்த தாயே நீ மண்ணுலகை விட்டு
மறைந்தாலும் எங்களின் மனங்களில்
என்றென்றும் வாழ்ந்திடுவீர்கள் தாயே!!
எங்களின் வளமான வாழ்விற்கு
வழிகாட்டி நின்ற தாயே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
Very nice lady Very helpful lovable person Very nice people my own experience