கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், இயக்கச்சி, முல்லைத்தீவு முள்ளியவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு தனபூபதி அவர்களின் நன்றி நவிலல்.
ஆழாத்துயரில் எமையாக்கி
ஆழ்துயில் கொள்ளும் எங்கள் அம்மா
அப்பா முன் செல்ல அவர் வழி நீ செல்ல
இருவரையும் இழந்து நாம் இங்கே தவிக்கின்றோம்
உங்கள் அன்புக்காய் ஏங்குகின்றோம்
கண்ணுக்குள் மணிபோல் இமைபோல் காத்தீர்கள்
சிப்பிக்குள் முத்தாய் நமை வளர்த்தீரகள்
கண்கண்ட தெய்வமாய் நம்பிக்கை தந்தீர்கள்
இவையெல்லாம் நாம் இனி எங்கு காண்போம்?
எங்களுக்காய் வாழ் நாள் முழுவதும்
வாழ்ந்து வழிகாட்டிய உங்கள்
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்...!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.