1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் திருநாவுக்கரசு தனபூபதி
வயது 74
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி: 24-03-2024
கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், இயக்கச்சி, முல்லைத்தீவு முள்ளியவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு தனபூபதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
தினம் தோறும் எமை வளர்த்தவள்- அம்மா!
எங்களுக்காய் தினம் தினம் வாழ்ந்தவள்
தன் உடலில் சுமந்து தன் உயிரை பகிர்ந்து
எமக்காய் உருவம் கொடுத்தவள்
இன்றோ தன் உருவம் மறைத்து - எங்கள் அன்னை
நம் நினைவிலும் கனவிலும் நிழலாடுகிறாள்.
தாயே நீயே எமை படைத்தவள் - அம்மா!
தாயே நீயே எமை என்றும் காப்பவள்
தாயே எங்கள் வாழ்வில் ஔி கொடு – எங்கள் தாயே
எமை மறவாதிருக்க அருள் கொடு
மாதந்தோறும் மாசியம் தந்தோம் - அம்மா!
உந்தன் ஆத்மாமுத்திபெற தொழுது நின்றோம்
ஆண்டுகள் தோறும் திதிகள் செய்வோம் -– எங்கள்
தாயே
உந்தன் ஆசிவேண்டியே வணங்கி நிற்போம்
என்றும் உந்தன் நினைவுகளுடன்
பிள்ளைகள்.....!!!!!!
தகவல்:
குடும்பத்தினர்