1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் திருநாவுக்கரசு ஜனேந்திரன்
வயது 43
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Boulogne-Billancourt ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு ஜனேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாடா மலராய் எம் சோலையில் பூத்த மலர்தனை
காலன் கிள்ளி எடுத்து ஆண்டு ஒன்றானதோ?
ஆண்டு பல ஓடினும் எம் மனங்களில் மாலையாக
நிறைந்து மணம் வீசியே இருப்பீர்கள்!
பறித்து விட்டான் இறைவனவன்
உங்கள் மேலுள்ள ஆசையாலே;
பறி கொடுத்து விட்டோமே நாம் உங்களை
என்ன பாவம் செய்திருப்போமோ?
நினைக்கும் போது எல்லாம்
உங்கள் நினைவோடு வாடுகின்றோம்
கண்ணை விட்டு மறைந்தாலும்- எம்
நெஞ்சை விட்டு மறைவதில்லை!
கண்முன்னே வருவாயா
கதறுதிங்கே உறவையா!
ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உங்கள் நினைவுகள் சுமந்து
உங்கள் வழியில் உங்கள் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்