
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு சரஸ்வதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22/02/2023
எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை..
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
ஆறாத்துயரில் தவிக்கின்றோம்
வல்லமையாய் வாழ்ந்து
வழி
நடத்திய எம் அன்னையே
நிழற்குடையாய் எம்மை
நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா
உன்
இமை மூடிப் போனதனால்
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது!
வார்த்தைகளே இல்லாத வடிவம்
அளவுகோளே இல்லாத அன்பு
சுயநலம் இல்லாத இதயம்
வெறுப்பை காட்டாத முகம் அம்மா....
காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்....
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Our deepest condolences. We lost such a nice and kind hearted person. Rest in peace Mami.