
யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகை சேவிஸ் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு நித்தியானந்தராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 21-08-2022
நிமிர்ந்த நடை நேரிய பார்வை
நேர்மையான உள்ளம்
நினைக்கின்றோம் உன்னை நித்தமும்
நினைவெல்லாம் உன் நினைவுகள்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா உங்களைப் போல் ஆகுமா?
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அமரர் திருநாவுக்கரசு நித்தியானந்தராசா அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவு நாள் 21-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப்பிரார்த்தனையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் நினைவாக கனகாம்பிகைக்குளம், சேவிஸ் வீதி, ஸ்ரீ அருள்முருகன் ஆலயத்தில் அமைக்கப்பெற்ற தீர்த்தக்கேணி திறந்து வைக்கும் நிகழ்வானது 24-08-2022 புதன்கிழமை மு.ப 09:05 மணிமுதல் மு.ப 09:35 மணிவரை நடைபெற இருப்பதால் அந் நிகழ்விலும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
இல. 60,
சேவிஸ் வீதி,
கனகாம்பிகைக்குளம்,
கிளிநொச்சி.
Rip