Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 FEB 1948
இறப்பு 18 JAN 2014
அமரர் கணேசு திருநாவுக்கரசு 1948 - 2014 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணேசு திருநாவுக்கரசு அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

தாய் தந்தைக்கு அன்பான பிள்ளையாய்
தாரத்திற்கு தக்க துணைவனாய்
தன் குழந்தைகளுக்கு பாசமான தந்தையாய்
தன்நலம் கருதா பண்பாளனாய் வாழ்ந்திருந்தாய்

ஆலமரம் போல அனைவருக்கும் நிழல் தந்தாய்
நாலும் தெரிந்தவனாய் நல்மனிதனாய் வாழ்ந்திருந்தாய்
காலமெல்லாம் எமைக்காத்து களித்திருப்பாய் என்றிருக்க
கண்ணிமைக்கும் நேரமதில் காற்றோடு காற்றானாய்

எம்முயிரை உன்னில் தொலைத்துவிட்டு
உன் இதயம் சுமந்து நடக்கின்றோம் கண்ணீரோடு
ஓராண்டென்ன ஓராயிரம் ஆண்டானாலும்,
எம் மனதை விட்டு அழியாது உன் நினைவும் நின்முகமும்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்...

தகவல்: குடும்பத்தினர்