Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 31 MAR 1959
விண்ணில் 09 MAY 2021
அமரர் திருமேனி சிறிகந்தராசா (சிறி)
வயது 62
அமரர் திருமேனி சிறிகந்தராசா 1959 - 2021 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமேனி சிறிகந்தராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 28.04.2022

அன்புத் தெய்வமே
எங்கள் ஆருயிர் அப்பாவே!
கண்ணை இமை காப்பது போல்
எம்மைக் காத்து நின்று
அறிவூட்டி வளர்த்தீரே!

கண்ணிமைக்கும் நேரத்தில்
எம்மை விட்டுச் சென்றீரே!
காணும் பொருளெல்லாம்
உந்தன் முகம் தேடுகின்றோம்
உமது குரலை மீண்டும்
ஒரு தரம் கேட்க மாட்டோமா
என ஏங்கித் தவிக்கின்றோம்

உதிரத்தை உரமாக்கி மெழுகு போல்
உம்மை உருக்கி எமக்கு ஒளி தந்தீரே
உமது கடமை முடிந்தது என
எம்மை ஆளாக்கி விட்டு சென்றீரோ!

நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும்
 எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
 நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 11 May, 2021