3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 JAN 1940
இறப்பு 07 JUL 2019
அமரர் திருமகள் கிருஷ்ணமூர்த்தி
பழைய மாணவி- யாழ் இந்து மகளிர் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி
வயது 79
அமரர் திருமகள் கிருஷ்ணமூர்த்தி 1940 - 2019 மலேசியா, Malaysia Malaysia
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர் சடையாளி, நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமகள் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
அம்மா மூன்று ஆண்டுகள் உங்களின்
 அரவணைப்பின்றித் தவிக்கின்றோம்
 நாங்களிங்கே! எத்தனை
உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!

உங்களோடு வாழ்ந்த அந்த
காலங்கள் எல்லாம் பொற்
 காலங்கள் தான்! அம்மா உங்களது
அன்பான அரவணைப்பு, இனிமையான
 பேச்சு, பழக்கவழக்கங்கள், நேர்மை,
 எல்லோருடனும் பழகும் தன்மை
 இவைகளால் எல்லோராலும்
 போற்றப்பட்டீர்கள் மதிக்கப்பட்டீர்கள்!

உங்கள் உடல் மட்டும் தான்
 பிரிந்து போனது ஆனால்
முழு நினைவாக உயிர்
எம்முடன் தான் இருக்குதம்மா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்