Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 27 AUG 1990
இறப்பு 05 FEB 2020
அமரர் தினிஷா M பிரான்ஸிகோ
வயது 29
அமரர் தினிஷா M பிரான்ஸிகோ 1990 - 2020 கொழும்பு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Staten Island New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தினிஷா எம் பிரான்ஸிகோ அவர்களின் நன்றி நவிலல்.

அன்புச் செல்வமே தினிஷா
நீ  மீளாத்  துயில்  கொண்டு
31 நாட்கள் ஆனதம்மா.....

மறைந்தது வெள்ளி அல்ல
இன்னொன்று வாங்கி ஈடு செய்ய
தங்கம் தொலைந்தால் பதில் ஒன்று வாங்கி விடலாம்
வைரம் மறைந்தால் வைடூதியத்தை தேடி விடலாம்
பவளம் தொலைந்தால் முத்துக் குளித்துவிடலாம்
மாறீடு செய்ய முடியாத மாசற்ற எம் செல்வமே!

எம் மனங்களைத் தொலைத்து
தினம் தினம் உன் பிரிவால் மரணிக்கின்றோம்
ஒருமுறை வந்து ஒரு வார்த்தை சொல்வாயா
வடிக்க இனி விழிகளில் கண்ணீரும் இல்லை...

இரத்தம் வற்றிய எம் இதயத்தில் - இனி துடிக்க நாடியில்லை
நடை பிணமாய் எங்களை நீ ஆக்கி விட்டு
கண் காணாத் தொலைவுக்கு ஏன் சென்றாய்?

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும், உலகின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 26 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.