1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
26
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Staten Island New York ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தினிஷா எம் பிரான்ஸிகோ அவர்களி்ன் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காத்திருக்க நேரமில்லை- காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணிய போது
ஈரமானது கண்கள் ! கனமானது இதயம்!
ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன் கணவர்,
பிள்ளைகள், குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்