சுவிற்சர்லாந்து முஞ்செமியர்ஐ (Müntschemier) - பிறப்பிடமாகவும், கேர்ச்செர்சைஐ (Kerzers) வாழ்விடமாகவும் கொண்ட செல்வன். தினேஸ் திரிபுரத்தரசு அவர்கள் 10.03.2026 செவ்வாய்க்கிழமை அன்று ஏற்பட்ட நேரிடரில் (விபத்தில்) இறைவன் இணையடி அடைந்தார்.
அன்னார் திரு.திருமதி. திரிபுரத்தரசு தயாபரி இணையரின் அன்பிற்கினிய மகனும்,
இறைசேர் கணேசதாஸ், திருமதி. விஜயலட்சுமி, இறைசேர் கனகரத்தினம் பூமணி அவர்களின் அன்புப் பேரனும்,
திருச்செல்வம் (செல்லா), திருசாயினி அவர்களின் உடன்பிறப்பும், திலக்சனா, சஞ்சித் அவர்களின் மைத்துனனும்,
சஷ்வின், சயானா ஆகியோரின் தாய்மாமனும், இறைசேர். தயாபரன் - திருமதி. சாந்திமதி, திரு.திருமதி. தயாளகுரு சசிகலா, திரு.திருமதி. கமலநாதன் தயாளினி, இறைசேர் தயாளபிரபு, திரு. தயாளன், திரு.திருமதி. திருஞானசோதி விஜயலெட்சுமி, திரு. திருமதி. பிரசாபதி மகாலட்சுமி, திரு.திருமதி. சிறீதரன் தவமலர் ஆகியோரின் மருமகனும்,
திரு.திருமதி. சிறீதரன் இராஜேஸ்வரி, இறைசேர். திருச்செல்வம், திரு.திருமதி. சந்திரன் நந்தினி ஆகியோரின் பொறாமகனும்,
திருக்குமரன், ரமேஸ், ஜெயலட்சுமி, தமிழ்ச்செல்வி, தர்சிகா, இராகவன், தர்சன், தர்சனா, ரூபினி, பிரியா, மயூராஜ், அஜீபன், சயன், அபிர்சனா, புரந்தா ஆகியோரின் மைத்துனனும்,
ஸ்ரீவித்தியா, கீர்த்தனா, ஆருதி, காருண்யா, அபிர்சனா, சர்மிளா, றிசான், சிவகரன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 17 Mar 2026 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details