Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 26 JUL 1957
இறப்பு 09 MAY 2026
திரு கந்தையா தில்லைநாயகம் (சந்திரன்)
லோஜி(Logi) நிறுவனத்தின் உரிமையாளர்
வயது 68
திரு கந்தையா தில்லைநாயகம் 1957 - 2026 மாதகல், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், நல்லூர், வவுனியா புளியங்குளம், மதவுவைத்தகுளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தில்லைநாயகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் 31 ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை
நாம் இழந்த துயரை
ஈடுசெய்ய முடியாமல் தவிக்கின்றோம்!

உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

வதனங்கள் மட்டும் போதும் என்று
புன்னகைக்கு வெண்ணிலவாய்
போட்டோவில் ஒளி தந்து
புன் சிரிப்புடன் எங்களை வாழ்த்தி
நிற்கும் தெய்வமே!

நிழலாக இல்லாமல்
நிஜமாக வந்திடுவீர்!
 காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
 அருகிலே நீங்கள் வாழ்வதை
நாங்கள் உணருகின்றோம்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்...

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 06-06-2026 சனிக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் யாழ் கீரிமலை புனிததீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிரியைகள் 08-06-2026 திங்கட்கிழமை மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறவிருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
தவசிகுளம் வீதி, மதவுவைத்தகுளம்,
வவுனியா

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.