Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 14 APR 1940
மறைவு 17 APR 2020
அமரர் தில்லைநாதர் விவேகானந்தராஜா
Accountant
வயது 80
அமரர் தில்லைநாதர் விவேகானந்தராஜா 1940 - 2020 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  தில்லைநாதர் விவேகானந்தராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும் அரவணைத்தாய்
அல்லும் பகலும் அயராமல் எமை காத்தாய்!
உலகுக்கு நீ உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்!

உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
ஐயா நாம் மறக்கவில்லை
உமை என்றும் நினைப்பதற்கு!

வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
பிறந்த மண்ணிலிருந்து நீங்கள் மறைந்தாலும்
எங்கள் நினைவில் என்றும்
நீங்காது வாழ்கின்றீர்கள் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!  

தகவல்: குடும்பத்தினர்