

கண்ணீர் அஞசலி. 01-02-2022 இல் கனடாவில் எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொண்டுவிட்ட எங்களது நெருங்கிய உறவினரும், உற்ற நண்பனுமான செளந்தன் அவர்களது அன்புத்தாயார், திருமதி. தில்லையம்மா தஙகராசா அவர்கள் அன்புக்கு இலக்கணமாய், அமைதியின் உருவமாய், அடக்கத்தின் இருப்பிடமாய், கற்பின்திருவுருவமாய், பண்பின் பெருந்தகையாய், பாசத்தின் உறைவிடமாய், அன்பு ஒளியாக அவனியில் பண்புடமை காத்து, பக்குவமாய் வழிநடந்த கருணையுள்ளம் கொண்ட கண்கண்ட நடமாடும் தெய்வமாகும்.அன்னையே! மண்ணோடு உங்கள் பூதவுடல் மறைந்து விட்டாலும்,உங்களின் நினைவுகள் எங்களின் இதயங்களில் இருந்து எப்போது மறைவதில்லை.கண்முண்ணே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்,எங்கள் முன்னே உங்களது புன்னகை பொழியும் முகம் எந்நாளும் உயிர் வாழும். மண்விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும், கண்விட்டு மறையாமல், எங்கள் உள்ளங்களில் கனகாலம் இருப்பீர்கள். அமைதியாகத் துயில் கொள்ளும் எங்களது அன்பு மாமியே! தங்களது ஆன்மா இறைபதம் சேர இறைவனை எந்நாளும் இறைஞ்சுகின்றோம். ஓம் சாந்தி சாந்தி,சாந்தி. இப்படிக்கு பிரிவால் துயருறும் குமார்& பவா குடும்பத்தினர்.
Accept our heartfelt condolences. May her soul rest in peace.