

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளையைப் பிறப்பிடமாகவும், வத்திராயன் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் சிவக்கொழுந்து அவர்களின் 31 ம் நாள் நினைவஞ்வலி மற்றும் நன்றி நவிலல்.
கைப்பிடித்த நாள் முதலாய் நான் கண்ணீர் விட்டதில்லை
என்னை கலங்கிட நீர் என்னை விட்டுச் சென்றாயோ??
அம்மா நீங்கள் அடித்து வளர்க்கவில்லை அன்பை
எமக்கு ஊட்டி ஆளாக்கி வைத்தீர்கள்
பொல்லாத காலனுக்கு இரங்கித்தான் போணீரோ
இப்போ நீங்கள் இன்றி எப்படி நாம் வாழ்வோம்.
தேடி எடுத்த திரவியங்கள் நீங்கள் என்பீர்கள்
தெய்வம் என நாம் நினைத்து
ஏற்றிவைத்த தீபமே அனைந்ததென்ன.
அழகு நிலா காட்டி, அமுதூட்டி எமைத்தூக்கி
அன்ன நடை காட்டி அரவணைத்த அம்மம்மாவே
துள்ளி விளையாடி உன் தோள் மீது ஏறுவது
மடத்தடியானுக்கு பொறுக்கவில்லையோ
விளையாடியது காணும் என்று
தன்னிடமே அழைத்து விட்டாறோ
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
20-01-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறவிருக்கும் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details