கவலைகளிலிருந்து உங்களது குடும்பம் நிலை பெற வேண்டிய ஆசுவாசத் தருணமிது வேதனைகளும் சோதனைகளும் உங்களைத் தாண்டிச் செல்லும் மாயைகள் சோதனை மேடுகளும் துயரப்பள்ளங்களும் உங்களது வழியை அடைத்து வேதனை செய்யலாம் புயலில் சிக்கிய காகித ஓடமாய் துயர்படும் உங்களின் மனம் சாந்தம் கொள்ளட்டும் வலிகளை வாங்கிக் கொண்டு விழிகளில் நீரை தாரை வார்க்கிறது இதயம் துடைத்தோம் போயிற்று கன்னத்தின் கோலங்கள்! துடைத்தும் போகவில்லை எம் நெஞ்சத்தின் ரணங்கள்! மரித்த பிறகும் உயிர் வாழும் உனது சிரிப்பும் சிறப்பும் உள்ளவரை உனக்கு இறப்பென்பதே கிடையாது மரணத்தோடு அழிவது உடல் மரணம் கடந்தும் வாழ்பவனே வாழ்வில் சிறந்த மனிதன்! ஆண்டுகள் கடந்தாலும் உயிர்புடன் வாழ்வீர்கள்…! உந்தன் நினைவுகளுடன் உன் தடம் தொடர்கிறோம் திலகவதி அக்கா…! கண்ணீருடன் றகு சாந்தி குடும்பம்.
Please accept our heart felt condolences.