Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 JAN 1935
இறப்பு 30 SEP 2020
அமரர் திலகவதி நடராஜா
முன்னாள் ஆசிரியை- அருணோதயா கல்லூரி அளவெட்டி
வயது 85
அமரர் திலகவதி நடராஜா 1935 - 2020 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி நடராஜா அவர்கள் 30-09-2020 புதன்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை(பொன்னையா மாஸ்டர்) இராசலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வியும், வைத்திலிங்கம் செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 காலஞ்சென்ற பொ.வை. நடராஜா(முன்னாள் ஆசிரியர்- தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

உஷா(மெல்போன்), வரதன்(லண்டன்), நளினி(சிட்னி), நந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவநாதன், ராஜ்குமார், காலஞ்சென்ற சாவித்திரி வரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மங்கையற்கரசி, மங்களேஸ்வரி, செல்வராணி, உமாபதி சிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அ.கந்தையா, காலஞ்சென்ற Dr.சிவபாதசுந்தரம், சபாரட்ணம், சுதித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வை.கந்தையா, கணேசநாதன் ஆகியோரின் அன்பு அண்ணியும்,

ரதினி(பைரவி), ருத்ரன்- மடலின், லக்‌ஷ்மி, அபிராமி, செபஸ்ரியன், இஸபெல், ஸ்ரெவான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனுக் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices