பாசத்திற்காய்....... தாயின் உதரத் தேர்வொன்று சேய்க்கொன்றுமில்லை இறைவனின் தேர்வது இறைவனுக்கு நன்றி, அன்னைக்காய் .... பெற்ற மகவொன்று இருப்பதுண்டு மற்ற மகவெல்லாம் தனதென்று சற்றும் தாளாத அன்பை வெற்றிடம் இல்லாமல் நிறைத்ததிற்கு..... பிள்ளையின் நட்பென்று வந்தவர் மேல் பித்தனா பாசம், அவர் உண்ணத் தந்தே உண்மைத் தாயன்பாய் ஈய்ந்ததற்காய் ...... மகளும் மருமகனும் கூட நண்பர்களும் நண்பிகளும் சேர பேரக் குழந்தைகளும் கணவனும் எத்தனை குழந்தைகள், எதுவும் அதிகமில்லாததாய் ....... தாயென நீ வாழ்ந்த காலத்தில் சேயொன்றின் நட்பாய் வந்து சேர்ந்திருந்து வாழ்ந்துணர்ந்த பேசாப் பாசத்திற்கு நன்றியம்மா..... பாசமெல்லாம் தீர்ந்ததென்று, தூர தேசந்தான் போனாயோ? பாசம் பொழிய வழி நடந்தவரே பாசமெல்லாம் எமக்கும் தெரியாதோ? வாழ்ந்த நாட்களுக்கு நன்றியம்மா வரும் நாட்களுக்கு வழிகாட்டியாகும் பிறப்பும் இறப்பும் சுழலுமெனில் பின்னுமொரு சந்திப்பு நிகழும்வரை.... நன்றி அம்மா சந்திக்க காத்திருக்கின்றோம் நன்றி வணக்கம் அமலன் அண்ணா குடும்பம்