1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புத்தூர் கிழக்கு குமாரசாமி வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Frutigen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திலகவதி செந்திலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்துமாதம் மடிசுமந்து
பக்குவமாய் பெற்றெடுத்து
பாலோடு பாசத்தையும் ஊட்டி
கண்களைப் போல் எமைக்காத்து
கண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே!
கண்ணில் அழுகை ஓயவில்லை
நெஞ்சம் உன்னை மறக்கவில்லை
நேசம் என்றும் நிலைத்திருக்க
பாசத்தை தந்து பறித்தெடுத்தவனே!
எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள் எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அம்மா!
உங்கள் இன்முகமும்
புன்சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை
உங்களின் ஆத்மா சாந்தியடைய
என்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
May her soul rest in peace . Sivapakkiyam selvaratnam family