யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி குணரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
உள்ளமுருகி எமை உயிரோடு
அரவணைத்த பண்புமிகு தெய்வமே!
பாசத்தின் உறைவிடமே
உங்களைப் பார்ப்பது இனி எக்காலம்?
காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும் உங்கள் கோலமுகமும்
உதட்டோரப் புன்னகையும் என்றும் மாறாது!
ஒரு உன்னதமான தெய்வம் நீ அம்மா
நாட்கள் 31 சென்றாலும் உங்களின்
பாசத்திற்கு நாம் பட்ட கடன் தீராதம்மா
ஆனால் முழு நினைவாக உயிர்
எம்முடன் தான் இருக்குதம்மா
துன்பம் துயரம் தெரியாமல்
எம்மை எல்லாம் ஆழாத்துயரில்
நாட்கள் 31 ஆனதம்மா
ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும்
நம் உள்ளத்தின் உள்ளே வளரும்
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் திலகவதி குணரட்ணம் அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 04.05.2024 சனிக்கிழமை அன்று காலை 6.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 06.05.2024 திங்கட்கிழமை பகல் 11.00 மணியளவில் இல 05, முருகன் வீதி திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திலும் நடைபெறும். தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.05, முருகன் வீதி,
திருநெல்வேலி கிழக்கு,
யாழ்ப்பாணம்.
Hello Ranjithamalar, I am sorry to hear about your mother's loss. please accept my deepest condolences.