

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திலகவதி உலகநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு நாணம் உபகாரம் தாட்சணியம் உண்மை
இவ்வைந்து குணங்களையும் மனை வாழ்வோடு
வையத்துள் வாழ்ந்து வாழும் போதே வழிகாட்டியாய்
சுற்றம் போற்றிட வாழ்ந்த எம் குல விளக்கே!
இன்று எம்மை விட்டு நீ பிரிந்து ஆண்டுகள்
ஐந்து கடிகார முள்ளோடு ஓட்டம் கொண்டது
உன்னோடு நாம் கொண்ட இல்லறமாயினும்
சொல்லறமாயினும் இனியும் மீழாது நிஜத்தினில்!
அதனை மீட்க்கும் பொழுதுகளில்
புன்னகையில் மலரும் கண்ணீரும்
கதை சொல்லி கட்டி அணைத்துக் கொள்ளும்
நினைவுகளை ஆண்டாண்டு தோறும்
அழுது புலம்பினாலும் மாண்டார் வருவாரோ இம் மாநிலத்தில்
என்ற ஒளவையின் வார்த்தைகளோடு ஐக்கிமாய் போனாயே!
காலைக் கதிரவன் கதிரினிலே கரையும்
வெண் பனித்துளிகள் போல் உன் நினைவுகள்
ஒவ்வொரு விடியலிலும் எம்மோடு கரைந்திருக்கும்!
உங்கள் பிரிவால் நெஞ்சம் தனில் வாடும் உங்கள் குடும்பத்தினர்