Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 27 AUG 1966
உதிர்வு 02 OCT 2026
திரு தேவராஜா தேவமனோகரன் (மனோ)
வயது 60
திரு தேவராஜா தேவமனோகரன் 1966 - 2026 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட தேவராஜா தேவமனோகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

காலன் உம்மைப் பறித்து 31 
நாட்கள் நீண்டு நெடியதாய்
கழிந்து போனதே அப்பா!

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம்- உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!

உங்களையே உலகமென
 உறுதியாய்
நாமிருக்க- ஏன்
விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

காலங்கள் மாறலாம்
உங்களை இழந்த ஆண்டுகள் மாறலாம்
உங்களுடன் வாழ்ந்த இனிய
நினைவுகள் காலத்தால்
எப்போதும் மாற்ற முடியாது..

எங்கள் ஜீவன் எம்முள் இருக்கும்
வரைக்கும் உங்களது நினைவலைகள்
எம்முள் ஓடிக்கொண்டு இருக்கும்...
என்றும் எம்முள் வாழ்ந்து
கொண்டிருப்பீர்கள்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

திரு,தேவமனோகரன் தேவராஜா(TPR Transport உரிமையாளர்) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி 01-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12.30 மணியளவில் 40 Av. de la Croix Blanche, 93600 Aulnay-sous-Bois, France எனும் முகவரியில் நடைபெறும். தாங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரவீன் - மகன்
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.