
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் பிரித்தானியா Manchester ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தேவமலர் அருளானந்தம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
வடக்கு, கிழக்கு , மேற்கு மாகாணங்களில்
பல்லாயிரம் திறன்மிக்க
தாதிய உத்தியோகத்தர்களை உருவாக்கி
இவ் உலகிற்கு அளித்த
உன்னத தாதிய சேவைக்கு
தன்னை
அர்ப்பணித்த
நிகரில்லா தாதியத்தின் தலைமகள்..
தற்துணிவும், நேர்மையும். இறைபக்தியும்,
நேர்மறை சிந்தனையும், சிறந்த ஆளுமையும்
அன்பாலும் களங்கமற்ற சிரிப்பாலும்
அனைவரையும் வழிநடத்திய அம்மாவே..
இன்று நீங்கள்
இந்த உலகில் மறையலாம் - ஆனாலும்
இந்த உலகம் இருக்கும் வரை
உங்கள் நினைவுகள் என்றும் மறையாது...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், வீடியோ பதிவுகளை அனுப்பி தங்கள் அஞ்சலிகளை தெரிவித்தவர்களுக்கும், அருமையான போஜனங்களை அன்புடன் அனுப்பி தங்கள் பாசத்தை பலப்படுத்தியவர்களுக்கும் , மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest in peace. will always be in our heart.