Clicky

31st Day Remembrance & Thank You Message
Born 01 NOV 1925
Rest 15 MAR 2026
Mrs Theresammah Mariampillai (Rasathi)
Age 100
Mrs Theresammah Mariampillai 1925 - 2026 Jaffna, Sri Lanka Sri Lanka
31st Day Remembrance & Thank You Message

In Loving memory of Mrs Theresammah Mariampillai's 31st remembrance & Thank You Card.

யாழ் மண்ணின் புதல்வியாய் உதித்து,
 தன்னம்பிக்கை உரமேற்று
நடைபயின்றவளே!

 பத்து மாதம் மடிசுமந்து
பக்குவமாய் பெற்றெடுத்து,
 பாலோடு பாசத்தையும் ஊட்டி
 கண்களைப் போல் எமைக்காத்து
 கண்மணியாய் வாழவைத்த
 அன்புத்தாயே!

 கஷ்டங்கள் பல வந்தாலும்
கவசமாய் எமைக்காத்து,
 தனிமையின் பாரத்தை சுமந்தும்
 தளராமல் நின்ற எங்களின்
பெண் சிங்கமே!

சிலுவை சுமந்த இயேசுவின் பாதமே
 உன் புகலிடமானது.
 “இயேசுவே” என்ற திருநாமம்
 உன் நாவில் தேனாய் வழிந்தது.
நூறு வயது வரை வாழ்ந்த உன் பயணம்
இன்று பரலோகத்தின் வாசலில் நிலைபெற்றது.

 உன் வீரமும், ஈரமும் எங்கள்
 இரத்தத்தில் ஓடும்.
 பரலோகத்தில் தந்தையோடு
நீ இணைந்திருப்பாய்;
 உன் நினைவுகள் என்றும்
எம்முடனே!

உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம். 

As we grieve the loss of our loved one, we would like to take this time to thank all the relatives, friends, neighbours, and everyone who has been so helpful and supportive during this difficult time. We deeply appreciate the flowers, wreaths, and expressions of sympathy we have received, as well as the many condolence messages shared in person, over the phone, via email, and through social media. Thank you for sharing your kind words, memories, and stories; the entire family truly appreciates your support.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

With sincere thanks, Family
Tribute 17 people tributed
Share your thoughts, memories..etc