நினைவுகளின் நினைவலையில் கண்ணீர் அஞ்சலி இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் வேளையிலே இவ்வுலகக் கொண்டாட்டம் எந்தனுக்கு வேண்டாமென்று இயேசுவிடம் சென்ற செய்தி நிலைகுலைய வைத்ததம்மா அன்றொரு நாள் அம்மாவை இழந்தோம் ஐந்து வயது அறியாக்குழந்தை றோஸ் ஐயாவின் பொறுப்பில் ஐவராய் நின்றோம் தனித்து நின்று எம்மைத் தாங்கிட முடியாமல் தனயனுக்கு பெண் தேடி தங்கமென உனைக் கண்டார் அண்ணியாய் வீட்டில் அடியெடுத்து வந்தவளே அன்பாலே எமக்கு அன்னையாய் ஆனாயே நெஞ்சு வெடிக்குதம்மா நினைவுகளை மீட்கையிலே இராசநாயகம், பபா, பபி என பலரும் அழைத்தாலும் பேர் சொல்லி அழைத்ததில்லை பெற்றவள் போல் நேசித்தாய் சின்னவளை றோஸ் என சிரிக்க வைத்துப் பார்ப்பாயே தம்பி, தங்கைச்சி என தயவாக அழைக்கும் குரல் எம் காதில் ஒலித்து இதயத்தை நொறுக்குதம்மா நாடுகள் பிரித்தாலும் கூட்டிலுள்ள குஞ்சுகளாய் உறவாலே இணைந்து ஒற்றுமையாய் கூடமைத்தோம் குஞ்சு நீ இன்று பஞ்சு மெத்தை தேடினாயோ பாரச்சுமை இறக்கி பரலோகம் பறந்தாயே ஏனென்று கேட்க எமக்குரிமையில்லை ஏங்குதம்மா எம் இதயம் அண்ணாவின் அன்புருவே அரும்பெரும் பெட்டகமே இப்புவியில் மறந்திவரை ஏன் தான் அவசரமோ குணசாலி நீ என்று குடும்பத்தில் புகழடைந்தாய் பிள்ளைகளை படிக்க வைத்து பேறுகள் நீ அடைந்தாய் மக்கள்இ மருமக்கள்இ மடிதவளும் பேரக்குழந்ததைகள் இடிவிழுந்தாற் போலின்று ஏங்கித் தவித்திருக்க கருவிலே உருவான உன் கண்மணிகள் கதறுகையில் அருகினிலே நின்று ஆறுதல் சொல்லாமல் நாடு விட்டு நாடு நாதியின்றி தவிக்கின்றோம் கண்ணீரால் நன்றி சொல்லி கதறி அழுகின்றோம் நாங்கள் நலம்பெற நல்லிதயம் கொண்டவளே எத்தனை உதவி செய்து எங்களை உயர்த்தி வைத்தாய் எங்களின் இன்பமே உன் இதயத்தின் விருப்பமாய் இரக்கத்தின் சிகரமாய் ஈகை பல செய்தீர் எல்லோர்க்கும் நல்லவராய் எப்போதும் வாழ்ந்தீரே செய்த நன்மை நினைக்கையிலே சிந்தை கலங்குதம்மா நெஞ்சு வெடிக்குதம்மா நீங்கா நினைவலைகள் அண்ணி என்று அழைத்து அருகில் நின்று அழ அரக்கன் கொரோனாவால் அங்கு வர முடியலையே தனிமையிலே எம் கண்ணீர் தாரையாய் ஓடுதம்மா!! விழியோரம் வழியும் கண்ணீர் வலிகளுடன் தம்பி-இராசநாயகம், தம்பி-பபா, தங்கை-பபி, தங்கை-றோஸ்
We had the privilege to have met Theresa aunty. She was a very kind, calm person with unshakable faith in god. Our deepest sympathies and condolences to her grieving family for her irreplaceable...