அமரர் திரேசா மரியநாயகம்
இளைப்பாறிய ஆசிரியை - திருக்குடும்ப கன்னியர் பாடசாலை- அனுராதபுரம், நல்லாயன் பாடசாலை - கொட்டாஞ்சேனை கொழும்பு, புனித றோக் பாடசாலை- யாழ்ப்பாணம்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உறவில் எம் அண்ணனின் "அண்ணி"யாய் பாசத்தில் அன்னையாய் எம்மை அரவணைத்த அண்ணியே, பிள்ளைகளால் பெரியம்மா என்று பாசமாக அழைத்த உங்களை இழந்து நாம் தவிக்கிறோம்.
அண்ணனின் துயரில் அவரின் அருகில் இருந்து ஆறுதல் ௯றி, அரவணைக்க நாம் இலலையே என்ற துயரம் நெஞ்சை அடைக்கிறது, வெம்புகிறோம், வெதும்புகிறோம்.
மகள் ஷாமா, மகன் றவி, மகன் சுரேஸ், மகள் ஜெசியா அவர்களையும் ஆரத்தழுவி அரவணைத்து எமது துயரத்தையும் ஆறுதலையும் எழுத்து வழி பகிர்கின்றோம்🌸🌸🌸🌸
எங்கள் அண்ணியே, கண்முன்னே வாழ்ந்தகாலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாழும் உயிர் வாழும், மண் விட்டு மறைந்து நீங்கள் விண்ணகம் சென்றாலும் கண் விட்டு மறையாமல் எம்முடன் இருப்பீர்கள்.
அமைதியாக துயிலும் உங்கள் ஆன்மா இறைபதம் அடைய இறைவனை இறஞ்சுகிறோம்🙏🏽.
துயருடன்- தம்பி இராசநாயகம்,வைலற், ஜெனாட், அமுதா, டொறின், அவ்லின்.
Write Tribute
We had the privilege to have met Theresa aunty. She was a very kind, calm person with unshakable faith in god. Our deepest sympathies and condolences to her grieving family for her irreplaceable...