யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, பேராதனை, நீர்கொழும்பு, நைஜீரியா Maiduguri, நியூசிலாந்து Palmerston North ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், Auckland ஐ வதிவிடமாகவும் கொண்ட தேம்பாமலர் அம்மையார் சிவச்செல்வன் குடும்பத்தினரின் நன்றி நவிலல்.
தித்திக்கும் தேனதாய் கவிதைப் பூங்காவதாய்
தேம்பா மலரதாய் பொலிந்திடு பூம்பொழில்
இல்லத்தரசி எம் இதம் நிறை தாயாம்
தெய்வத்திருமகள் தேடினாள் இறைபதம்
இன்சொல் மலர் முகம் நிறைந்து உபசரிப்பவள்
உற்றோர் உறவினர் பழகியோர் நண்பர்கள்
யாவரும் நேசமாய் உண்டு மகிழ்ந்தனர்
நீங்கினாள் இங்கிலை நெஞ்சில் நிறைந்துளாள்
சொல்லிடாத் துயரினைப் பங்கிட எண்ணியே
பல்வகை உதவிகள் ஆறுதல் நல்கினீர்
வார்த்தைகள் அறிகிலோம் பதில்செய வழியெது
பல்லாயிரம் முறை வேண்டி வணங்கினோம்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.