

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, பேராதனை, நீர்கொழும்பு, நைஜீரியா Maiduguri, நியூசிலாந்து Palmerston North ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், Auckland ஐ வதிவிடமாகவும் கொண்ட தேம்பாமலர் அம்மையார் சிவச்செல்வன் அவர்கள் 17-03-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பெருமாள் வெற்றிவேலு(இரண வைத்தியர், யாழ்ப்பாணம்), மெல்லியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை நல்லதம்பி(முதுதமிழ் புலவர், பண்டிதர்), தங்கரத்தினம்(வட்டுக்கோட்டை) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கலாநிதி நல்லதம்பி சிவச்செல்வன்(Auckland) அவர்களின் பாசமிகு துணைவியும்,
தயாளன்(Auckland), சுடர்விழி(Auckland), பாமா(Auckland), குணாளன்(Alice Springs, அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரவிவதனன், செந்தூரன், நிரஞ்சனா(Auckland), அருந்ததி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, நவரத்தினம், பராசக்தி, கதிர்காமநாதன், வைத்தியநாதன்(திருகோணமலை), நவமணி நாகசுந்தரம்பிள்ளை, சாரதாதேவி கானமயில்நாதன்(யாழ்ப்பாணம்), தயாநாதன்(ஜேர்மனி), பத்மாவதி சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மணிதிருநாவுக்கரசு, ஞானப்பூங்கோதை கதிரமலைநாதன், சிவயோகநாயகி வேலாயுதம்பிள்ளை, சாந்தநாயகி வைத்தியநாதன், விவேகானந்தன்(லண்டன்), புலவர் சிவநாதன்(லண்டன்), தவயோகநாயகி ராஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
தினேசன், சோபிதா, சஞ்ஜயன், சாதனா, லக்ஷனா, அஸ்வின் ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்பின் துடிப்பதாய் பண்பின் சிகரமாய்
காதல் மனைவியாய் ஆசை அம்மாவதாய்
பேரக்குழந்தைகள் பெருந்தகைப் பேர்த்தியாய்
உறவுகள் நட்புகள் அணைத்துபசரிப்பவள்
அடக்கமாய் அமைதியாய் புன்னகை மலர்பவள்
தேம்பாமலர் எனும் தித்திக்கும் செல்வியே
ஆண்டவன் பதம்தனில் சாந்தி நீ பெற்றிடு !