
திருமதி தயாரதி தாமோதரம்பிள்ளை தட்சணாமூர்த்தி
வயது 63

திருமதி தயாரதி தாமோதரம்பிள்ளை தட்சணாமூர்த்தி
1961 -
2025
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தயா அக்கா,
உங்களின் மறைவு செய்தி கேட்டு நாம் (கொக்குவில், நந்தாவில் அம்மன் கோவிலடி குஞ்சு அக்கா குடும்பம் ) எல்லோருமே அதிர்ந்து விடடோம்.
உங்கள் அம்மா, அப்பா அவையிலும் எங்களுடைய அம்மா, அப்பாவும் உறவினர்களாக வாழ்ந்து மிகவும் உற்ற நண்பர்களாக வாழ்ந்த காலடி சுவடுகளை நீங்களும் கடை பிடித்து , நீங்களும் உங்கள் சகோதரங்களும் வாழ்ந்தீர்கள். அந்த வசந்த கால நினைவலைகள் இப்பொழுதும் கனவு அலைகளாகவும் நினைவலைகளாகவும் எல்லோர் முன்னும் நிற்கின்றனவே தயா அக்கா. உங்கள் மறைவை மனம் ஏற்க மறுக்கிறதே.
மின்னாமல் முழங்கமால் எங்கே சென்று விடடீர்கள். உங்கள் மறைவை மனம் ஏற்க மறுகிறதே ...... இருந்தாலும் ஆண்டவனின் கடடளைப்படி நடப்பதை மானிடர் நாம் மனதை கல்லாக்கி கொண்டு ....
உங்கள் ஆத்மா சாந்தி அடைய நாம் எல்லோரும் பிரதிக்கிறோம், தயா அக்கா.
நாங்கள் எல்லோரும் சுகமாக இருக்கிறோம் என்று, உங்கள் ஆருயிர் நண்பியும் எங்களின் சகோதரியுமான மஞ்சுவிடம் கூறி விடுங்கள், தயா அக்கா.
ஓம் சாந்தி , ஓம் சாந்தி, ஓம் சாந்தி
Write Tribute