Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 20 FEB 1986
மறைவு 18 JUL 2024
அமரர் தவேஸ்வரன் கபிலன்
வயது 38
அமரர் தவேஸ்வரன் கபிலன் 1986 - 2024 Remseck, Germany Germany
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:07/08/2025

ஜேர்மனி Ludwigsburg Remseck ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவேஸ்வரன் கபிலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

    கண்மூடித்திறக்கும் முன்னே

ஓராண்டு வந்தந்துவே!

நீங்கள் வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்!
கண்மூடி விழிப்பதற்குள் கணப் பொழுதினில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று நினைக்கும்
முன்னே மறைந்தது ஏனோ!

வாழ்ந்த கதை முடியுமுன்னே
நீ வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும்
உன் நிலவு முகம் தேயாதடா மகனே!

நீங்கா நினைவுகளுடன்
கண்ணீர் மல்க வேண்டி நிற்கிறோம்!
ஆண்டவன் பாதத்தில்
அமைதி கொள்வாய் அன்பு மகனே! சாகோதரா!

காலங்கள் விடை பெறலாம் ஆனாலும்
கண்முன்னே நிழலாடும் உம் நினைவுகள்
பல ஆண்டுகள் சென்றாலும் எங்கள் உயிர் உள்ளவரை
உங்கள் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்போம்!

உம் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்!!!!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos