Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 11 NOV 1934
மறைவு 19 NOV 2021
அமரர் தவபாக்கியம் தருமலிங்கம்
இளைப்பாறிய ஆசிரியை
வயது 87
அமரர் தவபாக்கியம் தருமலிங்கம் 1934 - 2021 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், மலேசியா, யாழ்ப்பாணம், பிரான்ஸ் Paris , பிரித்தானியா லண்டன் Coulsdon ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தவபாக்கியம் தருமலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 28-11-2023

ஆண்டுகள் இரண்டாகியும்
ஆறவில்லை எங்கள் சோகம்
தாண்டிப் பல ஆண்டுகள் போனாலும்
மாறாது உங்கள் பாசம்
கூண்டுப் பறவையாக கூடிநாம்
வாழ்வதைக்கண்ட காலன்
தூண்டில் போட்டுக் கவர்ந்தானோ
எங்கள் தெய்வமே!!!

பத்துமாதங்கள் பக்குவமாய்
வயிற்றில் சுமந்து
சத்துள்ள உணவுவகைகளை
அறுசுவைக்குன்றாது
நித்தம் ஊட்டிவளர்த்த கண்கண்ட தெய்வமே
சத்தமில்லா உலகத்திற்கு சென்றது
எங்கே அம்மா!!!

கலைக்கல்வியைக்
காலத்திற்கேற்றவாறு கற்பித்து
அலைகடல் கடந்தும்
மலைபோல வாழ்வு சிறக்க
நிலைகுன்றாது நிழலாக
எமக்கிருந்த தாயே
சிலையாக மனதினில்
உருமாறியது ஏனம்மா?

எம் உள்ளத்தின் இருக்கும் தெய்வம்
நீ அம்மா எத்தனை ஆண்டுகள்
சென்றாலும், உன் பாசத்திற்கு
நாம் பட்ட கடன் தீராதம்மா!
உந்தன் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் உயிர் உள்ள வரை வாழுமம்மா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 24 Nov, 2021
நன்றி நவிலல் Sat, 18 Dec, 2021