Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 27 JAN 1995
மறைவு 19 FEB 2021
அமரர் தவநேசன் ஜதுர்சன்
பழைய மாணவன் - யாழ் இந்துக் கல்லூரி, அச்செழு Smart Holdings நிறுவன உரிமையாளர்
வயது 26
அமரர் தவநேசன் ஜதுர்சன் 1995 - 2021 அச்செழு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ் நீர்வேலி அச்செழுவை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தவநேசன் யதுர்சன் அவர்களின் நாற்பத்தைந்தாம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும்.

யது உன் அண்ணன் கபிலின்
பிரிவால் ஏற்பட்ட துயரத்தில் இருந்து
இன்னும் மீளமுடியவில்லை
அவனுக்காக அழுது வடிந்த கண்ணீர்
எங்கள் விழியோரங்களில் இன்னும் காயவில்லை

அதற்குள் நீ இப்படி ஓர் பேரிடியை கொடுப்பாய்
என நாங்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை
உன் பிரிவு மிஞ்சி இருந்த
எங்கள் உயிரையும் உதிரத்தையும்
பிரித்து எடுத்து விட்டது

 உன் குறும்பு பேச்சும் துருதுரு பார்வையும்
புன்னகை நிறைந்த வதனமும் தான்
எங்கள் மனக் கண் முன் நிழலாடுகின்றது

இவ்வளவு சிறு வயதிலேயே நீ
அடைந்த வளர்ச்சி எல்லோரையும் பிரமிக்க வைத்தது
உன் வளமான சந்தோச வாழ்வை
பார்த்து மகிழ காத்திருந்தோம்

ஆனால் எங்களை மகிழ்வுடன் வாழவைத்து
நீ விழித்திருந்தாய் இன்று நாங்கள் உன் பிரிவு
பொய்யாகி எங்கள் முன் வரமாட்டாயா
என விழித்திருக்கின்றோம்..

உன் உடல் எங்களை விட்டு பிரிந்தாலும்
உன் நினைவு எங்களை விட்டு பிரிந்து விடாது
எங்கள் உள்ளத்தில் உதிரம் எனும்நெய்யால்
விளக்கேற்றி உன்னை பூஐித்திருப்போம்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.


இங்ஙனம், அம்மா, அப்பா,சகோதரங்கள்
Tribute 40 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Notices

நினைவஞ்சலி Fri, 19 Feb, 2021