2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தவநேசன் ஜதுர்சன்
பழைய மாணவன் - யாழ் இந்துக் கல்லூரி, அச்செழு Smart Holdings நிறுவன உரிமையாளர்
வயது 26
Tribute
40
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நீர்வேலி அச்செழுவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த தவநேசன் ஜதுர்சன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மை விட்டு எங்கு
சென்றீரோ!
எங்களை விட்டு
பிரிந்திடவே
உங்களுக்கு
என்றும் மனம் வராதே!
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்ந்து வானடைந்து
இரண்டு
ஆண்டு ஆனாலும்
ஆறாது
உங்கள் பிரிவுத்துயர்!
எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து
வழிநடத்திய அந்த நாள்
எங்களை
விட்டு நீண்ட தூரம்
சென்றாலும்
உங்கள் அறிவுரைகள்
அரவணைப்புகள் என்றும்
எங்கள் நெஞ்சங்களில்
உயிர்வாழும் என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்!
எத்தனை உறவுகள் எம்மை
சூழ்ந்திருந்தாலும்
அத்தனை உறவுகளும் ...?
உங்கள் நினைவுடன் ...!
தகவல்:
அம்மா, அப்பா, சகோதரங்கள்
தொடர்புகளுக்கு
வீடு - பெற்றோர்
- Contact Request Details