யாழ். ஊர்காவற்துறை முகாம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோண் பற்றீஸ் தவமணி அவர்கள் 15-04-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், விசுவாசம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
ஜோண் பற்றீஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
ஐடா, ஐடன், ஐடெசி, ஐரதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற வண்ணமணி(அருந்தவம்), சீவரெத்தினம்(இலங்கை), காலஞ்சென்ற துரை, கனகமணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற இராசரெத்தினம், துரைரெத்தினம்(இலங்கை), நவமணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வவி(இந்தியா), மாலினி(பிரான்ஸ்), புஸ்பராசா(பிரான்ஸ்), செபநேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுசி, சுலைக்ஷன், பவிதா, சுதர்மன், கவின்சியா, நிக்சியா, யசிக்கா, யசிந், யனிதா, றிஷா, றியூறி, றிதிஷ், றிஷானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெய்சன், ஜெய்தன், அஸ்வாத் கெவின், அலிஸ் கருணியா, தலிஷா, தேயான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பாசமிகு சகோதரங்கள் மனம் பதற
பெற்ற பிள்ளைகள் கதறியழ
மருமக்கள் பதறியழ
பேரப்பிள்ளைகள் தேடியழ
உற்ற சொந்தங்கள் பரிதவித்தழ
உறவு நீங்கி போனாயே...
ஊரோடும் உறவோடும்
உற்ற சொந்தங்களோடும்
பேரோடும் புகழோடும்
பெரு வாழ்வு வாழ்ந்தவரே...
இல்லையெனாது இனிய சொல்லாய்
நறுமுகை தவிழ நாடி வந்தோர்
உள்ளம் உவகையுற
வாழ்வாங்கு வாழ்ந்தவரே...
இன்று மண்மீதிப் கண்மூடி
எங்கள் மனமெல்லாம் ரணமாக
உமைத் தேடித் தவிக்கின்றோம்
உங்கள் ஆன்மா சாந்திபெற
இறையருளைப் பிராத்திக்கின்றோம்..
மதிப்புக்குரிய காலம் சென்ற தவமணி ஜான் பப்டிஸ்ட் குடும்பத்தாருக்கு , என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சில ஆறுதல் வார்த்தைகள் உங்கள் அனைவரும் ஆறுதல் படுத்தும் நோக்கொத்தோடு...