நன்றி நவிலல்
பிறப்பு 07 SEP 1927
இறப்பு 13 APR 2021
திருமதி தவமணி கனகசபை 1927 - 2021 எழுதுமட்டுவாள், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், ஹற்றன், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தவமணி கனகசபை அவர்களின் நன்றி நவிலல்.

எமது குடும்பத்தின் அன்னையான அன்பிற்குரியவர்
எம்மைவிட்டு அகன்ற வேளையிலே
வெளிநாடுகளில் இருந்தும் உள்நாட்டிலே தொலைவிலிருந்தும்
கொரோனாத் தொற்றுக்கான சட்டத்திற்கு உட்பட்ட முறையில் ஒழுகித்
தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் மூலமாகத் தொடர்பு கொண்டு
எமக்கு ஆறுதல் வார்த்தை நல்கித் தேறுதல் தர முனைந்த
உற்றார், உறவினர், நண்பர்களுக்கும்
மலர்வளையம், மாலை, மலர்கள் என்பன தந்து அஞ்சலி செய்தோருக்கும்
அமரரின் பூதவுடலைக் கண்டு அஞ்சலி செய்தோருக்கும்
அமரர் வாழ்ந்த பூர்வீக மண்ணான எழுதுமட்டுவாளிலே
செய்திகேட்டு ஒன்றாகி இறுதிக் கிரியை நிகழ்வை
ஒளிபரப்பிலே கண்டு துயர் பகிர்ந்த அன்புள்ளங்களுக்கும்
அவ்வாறான நிகழ்வை அன்போடு ஒழுங்கு செய்தோருக்கும்
அஞ்சலி உரைகள் நிகழ்த்தியோருக்கும்
அமரரின் மறைவை ஒட்டிய இரங்கற் பிரசுரங்களை
அச்சிட்டுப் பகிர்ந்து அளித்தோருக்கும்
துயர காலத்திலே உணவு அளித்து உதவியோருக்கும்
இறுதிச்சடங்கிலே பங்கு கொண்டோருக்கும்
அதனை நிகழ்த்தி வைத்த நிறுவனத்தினருக்கும்
இறுதிச் சடங்கை நிகழ்த்திய குருக்களுக்கும்
அதனை மின்னம்பலத்திலே (zoom)
பங்கு கொண்டு துயர் பகிர்ந்தோருக்கும்
இன்னும் பல வழிகளிலே எமக்கு உதவிய
அன்பு உள்ளங்கள் அனைவருக்கும்
எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Acknowledgement

Our family wishes to acknowledge the many expressions of sympathy and gestures of kindness shown to us following the loss of our mother.

We offer our heartfelt thanks to extended families, friends and well-wishers who attended the viewing, the funeral and cremation service, some from a far, sent us condolence messages and tributes or shared online or called us on the phone from far and wide, arranged prayers, sent us wreaths and floral tributes and shared in our loss.

Our heartfelt thanks to those who organised, attended and spoke at the event in Eluthumadduval on the day of the funeral. Also, thanks to those who printed and hung-up banners and distributed leaflets. It was great consolation that so many mourned her passing with us.

Our sincere thanks also to all those who brought food when we were in mourning. Our thanks also to the iyer who conducted the last rites and other ceremonies until 31st.

Our thanks to all those who were understanding of the limited opportunity to attend the events held in this period and observed the COVID-19 restrictions.

To those who helped in any way, your contribution made our loss more bearable. Please accept this acknowledgement as an expression of our deepest gratitude.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 66 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.