யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Ohio, Dublin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி சிவபாலசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மறைவு செய்தி கேட்டு, உடனே எமது இல்லம் நாடி வந்து எங்களுக்கு ஆறுதல் சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும் மற்றும் உள்ளூரிலும்,வெளிநாடுகளிலிருந்தும் தொலைபேசி மூலமும், சமூக வலைத்தளங்களூடாகவும் அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும், மலர்வளையங்கள் வைத்து மலரஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இரங்கலுரை ஆற்றிய பெரியவர்களுக்கும் இறுதிக்கிரியைகளிலும் அந்தியேட்டி, வீட்டுகிரியைகளிலும் பங்குபற்றியவர்களுக்கும், அந்நிகழ்வுகளை முறையே நடாத்தி முடிக்க பல்வேறு வழிகளிலும் எமக்கு உதவிகள் நல்கியவர்களுக்கும், , ஊரில் அனுதாபம் தெரிவித்த அனைத்துள்ளங்களுக்கும், அன்னாரின் நினைவாக, கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரம சிறுவர்களுக்கு மதிய போசன உணவளிக்க நன்கொடை நல்கிய வேம்படி மகளிர் கல்லூரி 87 ம் அணி நண்பிகளுக்கும், இன்றுவரை எம்மோடு தோளோடு தோள் சேர்த்து கையோடு கைகோர்த்து நிற்கும் அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
உங்கள் இழப்புக்கு இரங்கல்! காலம் துயரைத் தணிக்க விழைகிறோம்.