Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 30 APR 1943
இறப்பு 16 MAY 2025
அமரர் தவமணிதேவி சந்திரலிங்கம் (வண்ணம்)
வயது 82
அமரர் தவமணிதேவி சந்திரலிங்கம் 1943 - 2025 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வல்வெட்டித்துறை சடையாண்டி கோவிலடியைச் சேர்ந்த தவமணிதேவி சந்திரலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

ஆருயிர் அன்னையே…
மாதம் ஒன்று ஆனதோ
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து...

 நாட்கள் 31 கடந்தும்
 மீளவில்லை உங்கள் நினைவில்
 இருந்து தாயே

 அம்மா உங்கள் கடமைகளை
 மிகவிரைவில் முடித்துக்கொண்டு
 எங்களிடமிருந்து சென்றுவிட்டீர்களே!

 மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு அம்மாவாக வந்திடுங்கள்
 காத்திருப்போம்!

 எவ்வளவு காலம் சென்றாலும்
உங்கள் நினைவுகள் எங்களை
விட்டு போகாது
 உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

எமது அன்னையின் மறைவால் நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு ஆதரவாக இருந்த செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.