

யாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கலாசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி இரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?
காயங்கள் ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் களைந்துபோகும்
ஆனால் என்றுமே மாறாமல் இருப்பது
உன் பாசம் மட்டுமே
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்
உங்களுடைய ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
I want to offer you my sincerest condolences on the death of your Mother. What a kindhearted woman. Her soul rest in peace. Our prayers are with you. I am unable to come directly due to the...