கொழும்பு மட்டக்குளியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ தற்காலிக வாழ்விடமாகவும், மட்டக்களப்பு பெரியகல்லாற்றை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட தாசன் எட்வேட் ஜோன் எட்வேட் அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் அப்பாவின் மரணச்செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள், அஞ்சலிப்பிரசுரங்கள், பேனர்கள் சாத்தியவர்களுக்கும், இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்து கொண்டிருக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
11-04-2023 ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்து 13-04-2023 ம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்ட அமரர் ஜோன் எட்வேட் அவர்களின் எட்டாவது நினைவு நாள் 18-04-2023 செவ்வாய்க்கிழமை பி.ப 06:30 மணியளவில் மட்/ பெரியகல்லாற்றில் இருக்கும் அவரில்லத்தில் நடைபெற இருக்கும் அன்னாரது எட்டாவது நினைவு நாள் ஆராதனையிலும், இராப்போசனத்திலும் ( இரவு உணவு ) கலந்து கொள்ளும் படி உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.
Our Deepest Sympathies Our Deepest Condolences to the Family Uncle we miss you &last 😔 😢 you God bless you all your family Family Haridas Switzerland