"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும்
பிதாவினிடத்தில் வரான்." (இயேசு கிறிஸ்து)
-யோவான்.14:6
கொழும்பு மட்டக்குளியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ தற்காலிக வாழ்விடமாகவும், மட்டக்களப்பு பெரியகல்லாற்றை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட தாசன் எட்வேட் ஜோன் எட்வேட் அவர்கள் 11-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாசன் எட்வேட் மனோன்மணி தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான சின்னையா இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,
புஷ்பலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஜெப்சி எம்மி ஜேக்கப் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
நிஷாந்தி, ஹேமமாலினி தேவி, டாளினி, ஷர்மிளா, டாக்டர் புஷ்பகாந்தன், கஜேந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்ரொனிகா ஜேக்கப், பிரபாகரன், சுதாகரன், ஜீவா, கிருபாகரன், டாக்டர் ஜெனித்தா, காலஞ்சென்ற தோமஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, சுந்தரலிங்கம், புஷ்பராணி, ஜேக்கப் மற்றும் சித்திரவேல், கோமதி(வசந்தி) ஆகியோரின் மைத்துனரும்,
கப்ரியேல், ஒஷாந்த், ஹெப்சிமிகாயெலா, றெனி, டினோஷாந்த், ஜெருஷா, டெனிஷா, சூசன், ஜெமிமா, தினோஜன், கெவிற்றா, கியாரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 13-04-2023 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் பெரிய கல்லாற்றில் உள்ள அவரது இல்லத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பெரியகல்லாறு உறவுகள் உறங்கும் இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது,
வெளியில் புஷ்பத்தைப்போல் பூக்கிறான்.
-சங்.103:15
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our Deepest Sympathies Our Deepest Condolences to the Family Uncle we miss you &last 😔 😢 you God bless you all your family Family Haridas Switzerland