2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
37
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்ஷிகா மயூரன் அவர்களி்ன் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிமிடங்களாய் நாட்களாய் மாதங்களாய்- இன்று
இரண்டு ஆண்டுகளாய் வளர்ந்து நிற்பது
உங்கள் பிரிவின்சோகம் அம்மா
அன்பென்னும் பாதையில் நாம்
அனைவரும் பயணிக்கவும்
எல்லா வளங்களையும் பெற்று
ஏற்றமுடன் வாழவும்
ஏணியாய் தாங்கிய எங்களின்
அன்புக்குரிய தாயே நாம்
கண்ணீரால் எழுதும் கவிமடல்
ஈர விழியோடு இராண்டு சென்றாலும்
மாறாது எம்துயர்
அம்மா என்று அழைக்கும்போது
அன்பாக அருகில் வந்து
அதரவாக எம்மை அணைத்திடும் சுகத்தினை
எங்களால் மறக்கமுடியவில்லை...
காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்....
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை!
தகவல்:
குடும்பத்தினர்