Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 06 OCT 1980
மறைவு 18 JAN 2023
அமரர் தர்மசீலன் செல்வநாயகம்
வயது 42
அமரர் தர்மசீலன் செல்வநாயகம் 1980 - 2023 யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அச்சுவேலி தெற்கு ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மசீலன் செல்வநாயகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

தர்மசீலா! தர்மத்தின் தலைவா
அறிவில் நீ யென்றும் ஜெக ஜோதி
அன்பில் நீ யென்றும் தாயுமானவன்
பண்பானவன் தன்நிகரற்றவன்

அற்புதப் பிறவியே அமுதளிக்கும் அட்சய பாத்திரமே
பொறுமையின் சிகரமே தன்னடக்கத்தின் அதிபதியே
தமிழ் மீது நீ கொண்டாய் பற்றதிகம்
தமிழுக்காய் நீ செய்தாய் பல தியாகம்

மனைவியெனும் அங்கீகாரம் தந்தாய்
மரியாதையுடன் நடத்திச் சென்றாய்
பல துன்பங்கள் உனைச் சூழ்ந்த போதும்
முகத்தினில் புன்னகை வீசிச் சென்றாய்

நல்லவர்கள் இப்பூமியில் வாழ்வதில்லை
அதை உணர்த்திச் சென்றது உன் மரணம்
சிவமந்திரம் சொல்லி வாழ்ந்திருந்தாய் இன்று
சிவனடி சேர்ந்து அமைதி கண்டாய்

ஓம் நமசிவாய!

அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், மனைவி
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்