Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 20 AUG 1956
இறப்பு 21 NOV 2025
திருமதி தர்மரத்தினம் விஜயலட்சுமி (கிளி)
வயது 69
திருமதி தர்மரத்தினம் விஜயலட்சுமி 1956 - 2025 வட்டக்கச்சி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கிளிநொச்சி வட்டக்கச்சி ஆறுமுகம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes-la-Jolie Rolleboise ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மரத்தினம் விஜயலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

என்னவளே என் இனியவளே!
உன்னோடு நான் வாழ்ந்த வாழ்க்கை
என் வாழ்வில் நான் இழந்த இந்த இழப்பை
இறைவன் என் வாழ்நாள் முழுவதும்
தாங்க முடியாமல் செய்துவிட்டான்!

தனி மரமாக விட்டு ஏன் அவசரமாக சென்றுவிட்டாய்
இவ்வளவு தான் நம் வாழ்க்கை என்று
காலம் நினைத்துவிட்டதா?

காலங்கள் உருண்டு போனாலும்
கண்முன்னே நிழலாகும் உன் நினைவுகள்
ஒரு போதும் என்னை விட்டு அகலாது! 

பத்துமாதம் மடிசுமந்து பக்குவமாய்
 பெற்றெடுத்து பாலோடு பாசத்தையும்
 ஊட்டி கண்களைப் போல் எமைக்காத்து
 கண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே!

 அன்புடனும் அளவற்ற பாசத்துடனும்
 கண் இமைக்குள் வைத்து வாழ வழிகாட்டிவிட்டு
 எம்மை விட்டு பிரிந்தது ஏனோ?

 கஷ்டங்கள் பல வந்தாலும் கவசமாய்
எங்களைக் காத்தது உங்கள் பாசம் அம்மா......!!!...!!
 எத்தனை யுகங்கள் தவமிருந்தாலும்
 இந்த சுகம் இனிக் கிடைக்காதே..!

 அம்மா நீங்கள் எங்களைப் பிரிந்தாலும்…..!
 உங்கள் நினைவுகள் என்றும் எம்முடனே!
 உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!     

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.